20,000 பட்டதாரிகளை அரச சேவையில் இணைக்க நடவடிக்கை

20,000 பட்டதாரிகளை அரச சேவையில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை

by Bella Dalima 29-05-2018 | 4:51 PM
Colombo (News 1st)  எதிர்வரும் ஜூலை மாதம் 2 ஆம் திகதி முதல் 20,000 பட்டதாரிகளை அரச சேவையில் இணைத்துக்கொள்ளும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அமைச்சு தெரிவித்தது. அண்மையில் நடைபெற்ற நேர்முகப் பரீட்சைகளில் தெரிவு செய்யப்பட்டவர்கள் அரச சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக அமைச்சின் மேலதிக செயலாளர் அசங்க தயாரத்ன கூறினார். கடந்த ஏப்ரல் மாதம் 16 ஆம் திகதி முதல் மே மாதம் 05 ஆம் திகதி வரை 25 மாவட்டங்களை உள்ளடக்கும் வகையில் நேர்முகப் பரீட்சைகள் நடைபெற்றன. இதன் இறுதி பெறுபேறுகள் அமைச்சிற்கு கிடைத்துள்ளதாக பொருளாதார அலுவல்கள் அமைச்சின் மேலதிக செயலாளர் தெரிவித்தார். இதன் பிரகாரம், 20 ஆயிரம் பேரை அரச சேவைகளில் இணைத்துக்கொள்ளவுள்ளதாக தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அமைச்சு குறிப்பிட்டது.