ஜூலையில் இலங்கை மேசைப்பந்தாட்ட சங்கத் தேர்தல்

ஜூலை மாதத்தில் இலங்கை மேசைப்பந்தாட்ட சங்கத் தேர்தல்

by Bella Dalima 29-05-2018 | 4:44 PM
Colombo (News 1st)  இலங்கை மேசைப்பந்தாட்ட சங்கத்தின் தேர்தல் ஜூலை மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் நடைபெறும் என உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மேசைப்பந்தாட்ட சங்கத்தின் விசேட பொதுக்குழுக் கூட்டத்தின் போது இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. 2017 ஆம் ஆண்டிற்கான கணக்கறிக்கை, கணக்காய்வாளர் நாயகத்திற்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், அதற்கான அனுமதி கிடைக்கப்பெற்றவுடன் தேர்தலுக்கான திகதியொன்றை அறிவிக்கவுள்ளதாக இலங்கை மேசைப்பந்தாட்ட சங்கம் அறிவித்துள்ளது.