74 டின் மீன் கொள்கலன்களை மீள அனுப்ப தீர்மானம்

இறக்குமதி செய்யப்பட்ட 74 டின் மீன் கொள்கலன்களை மீள அனுப்ப தீர்மானம்

by Bella Dalima 29-05-2018 | 5:01 PM
Colombo (News 1st)  நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட நுகர்வுக்கு உதவாத 74 டின் மீன் கொள்கலன்களை மீள அனுப்ப இலங்கை சுங்கம் தீர்மானித்துள்ளது. குறித்த டின் மீன்கள் தரமற்றவை என உறுதிப்படுத்தப்பட்டதால், இந்த தீர்மானத்தை எடுத்ததாக சுங்க ஊடகப் பேச்சாளர் சுனில் ஜயரத்ன தெரிவித்தார். அண்மையில் சீனா, தாய்லாந்து நாடுகளிலிருந்து 388 மில்லியன் ரூபா பெறுமதியான 74 கொள்கலன்களில் அடைக்கப்பட்ட டின் மீன்கள் இறக்குமதி செய்யப்பட்டன. இந்த விடயம் தொடர்பில் சுகாதார சேவை பதில் பணிப்பாளர் நாயகம் டொக்டர் சரத் அமுனுகமவிடம் நியூஸ்ஃபெஸ்ட் வினவியது. தரமற்ற டின் மீன்கள், சந்தைகளில் விற்பனை செய்யப்படுகின்றதா என்பது தொடர்பில் பரிசோதிக்குமாறு பொது சுகாதார பரிசோதகர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.