பிறேசில் கால்பந்தாட்ட அணி இங்கிலாந்துக்கு விஜயம்

பிறேசில் கால்பந்தாட்ட அணி இங்கிலாந்துக்கு விஜயம்

பிறேசில் கால்பந்தாட்ட அணி இங்கிலாந்துக்கு விஜயம்

எழுத்தாளர் Staff Writer

28 May, 2018 | 10:50 pm

உலகக்கிண்ண கால்பந்தாட்டத்தொடரில் பங்கேற்கும் பிறேசில் குழாம்
இங்கிலாந்தை சென்றைடைந்துள்ளது.

உலகக்கிண்ண கால்பந்தாட்டத்தொடருக்கான பயிற்சிப் போட்டிகளில்
கலந்து கொள்வதற்காகவே பிரேசில் குழாம் அங்கு சென்றுள்ளமை
சிறப்பம்சமாகும்.

உலகக்கிண்ண கால்பந்தாட்டத்தொடர் அடுத்த மாதம் 14 ஆம் திகதி
ரஷ்யாவில் ஆரம்பமாகவுள்ளது.

ஜூலை மாதம் 15 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள உலகக்கிண்ண
கால்பந்தாட்டத்தொடருக்காக சகல அணிகளும் தீவிரமாக தயாராகி
வருகின்றன.

இந்நிலையில் முன்னாள் சம்பியனான பிறேசில் அணியும் அதற்காக
சிறப்பான முறையில் தயாராகி வருகிறது.

இந்த குழாத்தில் நெய்மார் , போலினோ , டியுகோ டி சில்வா
உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் உள்ளடங்கியுள்ளமை சிறப்பம்சமாகும்.

லண்டனில் அமைந்துள்ள டொடென்ஹம் மைதானத்தில் பிரேசில்
வீரர்கள் பயிற்சிகளை மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகக்கிண்ண கால்பந்தாட்டத்தொடருக்கு முன்னர் பிரேசில் அணி
க்ரோஷியா , மற்றும் ஒஸ்ரியா உள்ளிட்ட அணிகளுடன் பயிற்சிப்
போட்டிகளில் விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்