பிரதமர் வடக்கின் பல பகுதிகளுக்கு விஜயம்

பிரதமர் வடக்கின் பல பகுதிகளுக்கு விஜயம்

பிரதமர் வடக்கின் பல பகுதிகளுக்கு விஜயம்

எழுத்தாளர் Staff Writer

28 May, 2018 | 10:14 pm

வடக்கிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று முற்பகல் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற மீளாய்வு கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தார்.

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று முற்பகல் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம் சுவாமிநாதன், இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஷ்வரன், இலங்கை தமிழசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, வட மாகாண சபை உறுப்பினர்கள், அமைச்சின் செயலாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

எனினும் இந்தக் கலந்துரையாடலில் வட மாகாண முதலமைச்சர் மற்றும் வட மாகாண அமைச்சர்கள் பங்கேற்றிருக்கவில்லை.

கல்வி, காணி விடுவிப்பு, வீடமைப்பு திட்டங்கள், குளங்கள் அபிவிருத்தி, வீதி அபிவிருத்தி மற்றும் நகர திட்டமிடல் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட்டுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்