பணத்திற்கு விலை போன இலங்கை கிரிக்கெட் வீரர்கள்

பணத்திற்கு விலை போன இலங்கை கிரிக்கெட் வீரர்கள்

பணத்திற்கு விலை போன இலங்கை கிரிக்கெட் வீரர்கள்

எழுத்தாளர் Staff Writer

28 May, 2018 | 9:04 pm

Colombo (News 1st) – பணத்திற்காக கிரிக்கெட் ஆடுகளத்தின் தன்மையை மாற்றி ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபட்டமை தொடர்பில் அல்ஜெசீரா அலைவரிசை வெளியிட்ட ஆவணப்படத்தில் இலங்கை வீரர்கள் இருவரின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன

இந்த விடயம் தொடர்பில் குறித்த இருவரும் ஸ்போட்ஸ் பெஸ்ட்டுக்கு கருத்து தெரிவித்திருந்தனர்

காலி சர்வதேச விளையாட்டரங்களின் உதவி முகாமையாளரான தரங்க இந்திக்க , மற்றும் முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் தரிந்து மென்டிஸ் ஆகியோர் ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபட்டுள்ளமையை . அல் ஜெசீரா அலைவரிசை இரகசியமான முறையில் தகவல்களை திரட்டி அதன் பின்னர் மேற்கொண்ட ஆராய்ச்சியின் மூலம் உறுதிப்படுத்தியது.

இதில் இலங்கை அணியின் முன்னாள் வீரர்களான தில்ஹார லொக்குஹெட்டிகே மற்றும் ஜீவந்த குலதுங்க ஆகியோர் இந்த கொடுக்கல் வாங்கல் தொடர்பில் கலந்துரையாடியதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்