மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு ஞ

வௌ்ளத்தினால் பாதிக்கப்பட்ட மாவட்ங்களை வழமைக்கு கொண்டு வரும் பணியில் ராணுவத்தினர்

by Staff Writer 27-05-2018 | 9:45 PM
COLOMBO (News 1st) - வௌ்ள நிலைமை ஏற்பட்டுள்ள மாவட்டங்களை வழமைக்கு கொண்டுவரும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. இதற்காக 471 இராணுவத்தினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இராணுவப்பேச்சாளர் சுமித் அத்தபத்து தெரிவித்தார். கம்பஹா, கொழும்பு ,மாத்தறை, காலி. இரத்தினபுரி, புத்தளம், களுத்துறை மற்றும் கேகாலை மாவட்டங்களில் இவர்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இதேவேளை, புத்தளம் மஹாவெவ பகுதியில் வௌ்ளத்தில் மூழ்கிய கிணறுகளை சுத்தப்படுத்தும் பணிகளில் கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர். இதற்காக கடற்படையின் 12 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக கடற்படைப்பேச்சாளர் தினேஷ் பண்டார தெரிவித்தார். இதனைத்தவிர 8 மாவட்டங்களில் அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நடவடிக்கையில் கடற்படையின் 63 குழுவினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இதேவேளை, கொழும்பு மாவட்டத்தை அண்மித்த பகுதிகளில் 41 இராணுவத்தினர் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இராணுவப்பேச்சாளர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார்.