ஜா எல  அணைக்கட்டை பாதுகாக்க விசேட திட்டம்

ஜா எல அணைக்கட்டை பாதுகாக்க விசேட திட்டம்

ஜா எல அணைக்கட்டை பாதுகாக்க விசேட திட்டம்

எழுத்தாளர் Staff Writer

27 May, 2018 | 9:59 pm

COLOMBO (News 1st) – கடும் மழையினால் பெருக்கெடுத்துள்ள ஜா- எல கால்வாயின் அணைக்கட்டை பாதுகாப்பதற்கான விசேட வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மணல் மூடைகளை அடுக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கம்பஹா மாவட்ட செயலாளர் சுனில் ஜயலத் தெரிவித்தார்.

ஜா- எல கால்வாயின் முகத்துவாரப்பகுதியை விரிவாக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளதாக மாவட்ட செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்காக பொலிஸ் மற்றும் முப்படையின் 250 பேர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அடுத்த சில மணித்தியாலங்களில் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் கூறியுள்ளார்.

இதேவேளை, நீர்ப்பாசன திணைக்களத்தின் அதிகாரிகள் குழுவொன்றினால், ஜா – எல கால்வாயின் அணைக்கட்டு தொடர்பில் விசேட ஆய்வொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் கம்பஹா மாவட்ட செயலாளர் சுனில் ஜயலத்
குறிப்பிட்டுள்ளளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்