கம்பஹா வலய பாடசாலைகள் நாளை மூடப்படும்

கம்பஹா வலய பாடசாலைகள் நாளை மூடப்படும்

கம்பஹா வலய பாடசாலைகள் நாளை மூடப்படும்

எழுத்தாளர் Staff Writer

27 May, 2018 | 9:50 pm

சீரற்ற வானிலை காரணமாக கம்பஹா கல்வி வலயத்தின் அனைத்து பாடசாலைகளும் நாளை மூடப்படவுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

அத்தனகளு ஓயாவின் நீர்மட்டம் அதிகரித்துச் செல்வதால் பெற்றோர்கள் முன்வைத்த வேண்டுகோளுக்கிணங்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

நாளைய விடுமுறைக்கு பதிலாக வேறொரு தினத்தில் பாடசாலை நடத்தப்படவுள்ளது.

எதிர்வரும் புதன்கிழமை முதல் வழமைபோன்று கற்றல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என கல்வியமைச்சு அறிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்