11 இலட்சம் மனித பெயர்களுடன் சூரியனைத் தொடும் முதல் ஆய்வு விண்கலம்

11 இலட்சம் மனித பெயர்களுடன் சூரியனைத் தொடும் முதல் ஆய்வு விண்கலம்

11 இலட்சம் மனித பெயர்களுடன் சூரியனைத் தொடும் முதல் ஆய்வு விண்கலம்

எழுத்தாளர் Bella Dalima

26 May, 2018 | 7:08 pm

சூரியனைத் தொடும் முதல் ஆய்வு விண்கலம் 11 இலட்சம் மனிதப் பெயர்களைத் தாங்கி செல்வதாக நாசா கூறியுள்ளது.

சூரிய குடும்பத்தில் அமைந்துள்ள மிகப்பெரிய நட்சத்திரம் சூரியனாகும். சூரியன் வாயுப் பொருள்களால் ஆன ஒரு நெருப்புக் கோளமாகும். சூரியனின் விட்டம் 14,00,000 கிலோ மீட்டர்களாகும். அதாவது புவியின் விட்டத்தைப் போல் 109 மடங்குகளாகும். சூரியனின் ஈர்ப்பு சக்தி, புவியின் ஈர்ப்பு சக்தியைப்போல் 28 மடங்கு அதிகமாகும். சூரியன் அது இருக்கும் அண்டத்தின் மையத்திலிருந்து சுமார் 32,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது, புவியிலிருந்து ஏறக்குறைய 150 மில்லியன் கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. அளவில் சூரியன் புவியைப் போல் 13,00,000 மடங்கு பெரியது.

சந்திரன், செவ்வாய் மற்றும் விண்வெளி ஆய்வுகளுக்கு விண்கலன்கள் அனுப்பப்பட்டுள்ளன. ஆனால், சூரியனுக்கு விண்கலம் அனுப்பி ஆய்வு செய்ய தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், அமெரிக்காவின் ‘நாசா’ மையம் சூரியனுக்கு விண்கலம் அனுப்பும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

சூரியனின் சுற்றுப்புற தட்பவெப்ப நிலை 5,500 டிகிரி செல்சியஸ் ஆக உள்ளது. அதற்கு தகுந்தாற்போன்று வெப்பத்தை தாங்கக்கூடிய வகையில் விண்கலம் தயாரிக்கப்படும். அது ஜூலை 31 ம் திகதி சூரியனுக்கு அனுப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாசாவின் பார்கர் சூரிய ஆய்வு விண்கலம் (NASA’s Parker Solar Probe) 11 இலட்சம் மனிதர்களின் பெயர்களைத் தாங்கிச் செல்கிறது என அமெரிக்க விண்வெளி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஏழு வருட பணி முடிவில், சூரியனின் வளிமண்டலத்தில் எந்த விண்கலமும் இதற்கு முன்னர் சென்றதை விட இந்த ஆய்வில் விண்கலம் சூரியனுக்கு மிக அருகில் சென்று ஆய்வு நடத்தவுள்ளது.

கடந்த மார்ச் மாதத்தில், ஒரு நட்சத்திரத்தைத் தொடுவதற்கு மக்கள் தங்கள் பெயர்களை அனுப்ப அழைப்பு விடுக்கப்பட்டனர்.

இரண்டு மாதங்களில் மொத்தம் 1,137,202 பெயர்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

மே 18 ஆம் திகதி விண்கலத்தில் பெயர்கள் கொண்ட மெமரி கார்ட் பொருத்தப்பட்டது.

திட்டமிட்டபடி ஜூலை 31 ம் திகதி விண்கலம் ஏவப்படவுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்