வௌ்ள நீரில் மூழ்கி அழிவடையும் வயல் நிலங்கள்

மட்டக்களப்பில் வௌ்ள நீரில் மூழ்கி அழிவடையும் வயல் நிலங்கள்

by Bella Dalima 26-05-2018 | 5:10 PM
Colombo (News 1st)  மழை காரணமாக மட்டக்களப்பிலுள்ள வயல் நிலங்கள் வௌ்ளத்தில் மூழ்கியுள்ளன. மட்டக்களப்பு - சின்னவௌி, சின்னாளன்வௌி, வந்தாறுமூலை மற்றும் சித்தாண்டி ஆகிய பகுதிகளிலுள்ள 700 ஏக்கர் வயல் நிலங்கள் வௌ்ளத்தில் மூழ்கியுள்ளன. கிரான்புல் பகுதியில் அணைக்கட்டு நிர்மாணிக்கப்படாமையால் வௌிப்பகுதியிலுள்ள நீர் உட்புகுவது காரணமாக வயல் நிலங்கள் நீரில் மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் சுட்டிக்காட்டினர். கிரான்புல் அணைக்கட்டினை நிர்மாணிப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட்டபோதும், இதுவரை எதுவித நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை என விவசாயிகள் விசனம் தெரிவித்தனர். மட்டக்களப்பு - வவுணதீவு பகுதியிலுள்ள வயல் நிலங்களும் வௌ்ளத்தில் மூழ்கியுள்ளன. உன்னிச்சை குளத்தின் மூன்று வான் கதவுகள் நான்கு அடி உயரத்திற்கு நேற்று அதிகாலை திறந்துவிடப்பட்டதை அடுத்து வயல் நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. வவுணதீவு பகுதியிலுள்ள சுமார் 6000 ஏக்கர் வயல் நிலங்கள் நீரில் மூழ்கி அழிவடையும் நிலையிலுள்ளதாக விவசாயிகள் குறிப்பிட்டனர்.