பாலிவுட்டிற்கு செல்லும் ரெஜினா

பாலிவுட்டிற்கு செல்லும் ரெஜினா

பாலிவுட்டிற்கு செல்லும் ரெஜினா

எழுத்தாளர் Bella Dalima

26 May, 2018 | 6:31 pm

தமிழில் வளர்ந்து வரும் நாயகிகளுள் ஒருவரான ரெஜினா கசாண்ட்ரா பாலிவுட் படமொன்றில் ஒப்பந்தமாகியுள்ளதால் உற்சாகத்தில் இருக்கிறார்.

‘கண்ட நாள் முதல்’ என்ற தமிழ் படத்தில் தான் முதலில் அறிமுகமானார் ரெஜினா.

தமிழில் சரியான அங்கீகாரம் கிடைக்காத நிலையில், ரெஜினாவை தெலுங்கு சினிமா கைகொடுத்துத் தூக்கியது.

தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக விளங்கும் ரெஜினாவை இப்போது தமிழ் சினிமா பயன்படுத்திக்கொள்கிறது.

இது பற்றி கேட்டால்,

சென்னையிலேயே பிறந்து வளர்ந்த பெண் நான். தமிழ் சினிமாவைவிட தெலுங்கில் நிறைய படங்கள் நடித்ததால் என்னை ஆந்திரப் பெண் என்று நினைக்கிறார்கள். இப்போது தொடர்ந்து தமிழ் படங்களில் வாய்ப்பு வருவது மகிழ்ச்சியாக இருக்கிறது. சென்னையில் வளர்ந்த எனக்கு நல்ல தமிழ்ப் படங்கள் ஆரம்பத்தில் கிடைக்கவில்லை. இப்போது நிறைய வாய்ப்புகள் தேடி வருகின்றன. முக்கியமாக தமிழில் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் தரும் படங்கள் நிறைய உருவாகின்றன. எனவே, அதுபோன்ற பலமான வேடங்கள் வரும் என்று காத்திருக்கிறேன்

என்றார்.

ரெஜினா அடுத்து இந்திக்கு செல்கிறார். இந்தியில் சோனம் கபூருடன் இவர் குகூ என்ற படத்தில் நடிக்கிறார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்