20 ஆவது அரசியலமைப்பு திருத்த பிரேரணை சபாநாயகரிடம் கையளிப்பு
by Bella Dalima 25-05-2018 | 3:54 PM
Colombo (News 1st)
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை நீக்குதல் உள்ளிட்ட சில யோசனைகள் அடங்கிய 20 ஆவது அரசியலமைப்பு திருத்த பிரேரணை இன்று சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டது.
மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்கவினால் தனிநபர் பிரேரணையாக இந்த பிரேரணை சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.