நாட்டின் ஏற்றுமதி 15 வீதத்தால் அதிகரிப்பு

நாட்டின் ஏற்றுமதி 15 வீதத்தால் அதிகரிப்பு

by Bella Dalima 25-05-2018 | 4:26 PM
Colombo (News 1st)  நாட்டின் ஏற்றுமதி கடந்த ஆண்டில் 15 வீதத்தால் அதிகரித்துள்ளதாக இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது. இதன் மூலம் ஏற்றுமதியின் பெறுமதி 15.4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை உயர்வடைந்துள்ளதாக சபையின் தலைவர் இந்திரா மல்வத்த குறிப்பிட்டார். இந்த ஆண்டில் சர்வதேச ஏற்றுமதியின் பெறுமதியை 17.8 பில்லியன் அமெரிக்க டொலர் வரை அதிகரிப்பதே தமது இலக்காகும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.