தாயின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றிய மியா ஜார்ஜ்

தாயின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றிய மியா ஜார்ஜ்

தாயின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றிய மியா ஜார்ஜ்

எழுத்தாளர் Bella Dalima

25 May, 2018 | 5:46 pm

நடிகை மியா ஜார்ஜ் தன் தாயின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றி இருக்கிறார்.

பிரபல மலையாள நடிகையான மியா ஜார்ஜ் தமிழில் அமர காவியம் படம் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது. இதையடுத்து, விஷ்ணு விஷாலுடன் இன்று நேற்று நாளை, சசிகுமாருடன் வெற்றிவேல், விஜய் ஆண்டனியுடன் எமன் என சில படங்களில் நடித்தார்.

தற்போது மலையாளப் படங்களில் நடித்து வரும் மியா ஜார்ஜ், தன்னுடைய தாயின் ஆசையை நிறைவேற்றி இருக்கிறார்.

ஸ்கை டைவிங் எனப்படும் வானில் பறக்கும் சாகசத்தில் ஈடுபாடு கொண்ட தன் தாயை பறக்க வைத்து மகிழ்ந்திருக்கிறார் மியா ஜார்ஜ்.

இதை நிறைவேற்றுவதற்காக புளோரிடாவில் உள்ள ஸ்கை டைவிங் அமைப்பிற்கு தனது தாயை அவர் அழைத்துச்சென்று அம்மாவோடு சேர்ந்து தானும் பறந்திருக்கிறார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்