உலகக்கோப்பை கால்பந்து: அர்ஜென்டினா அணியில் இருந்து கோல் கீப்பர் விலகல்

உலகக்கோப்பை கால்பந்து: அர்ஜென்டினா அணியில் இருந்து கோல் கீப்பர் விலகல்

உலகக்கோப்பை கால்பந்து: அர்ஜென்டினா அணியில் இருந்து கோல் கீப்பர் விலகல்

எழுத்தாளர் Bella Dalima

24 May, 2018 | 5:00 pm

ரஷ்யாவில் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள உலகக்கோப்பை கால்பந்து தொடருக்கான அர்ஜென்டினா அணியில் இருந்து கோல் கீப்பர் விலகியுள்ளார்.

ரஷ்யாவில் அடுத்த மாதம் 14 ஆம் திகதி முதல் ஜூலை 15 ஆம் திகதி வரை உலகக்கோப்பை கால்பந்து தொடர் நடைபெறவுள்ளது.

இதில் பங்கேற்று விளையாடும் 32 நாடுகள், தங்கள் அணி வீரர்களை அறிவித்து வருகின்றன.

அர்ஜென்டினா தங்கள் அணி வீரர்கள் பட்டியலை சமீபத்தில் அறிவித்திருந்தது. அதில் கோல் கீப்பர் செர்ஜியோ ரொமேரோ இடம்பிடித்திருந்தார்.

நேற்று முன்தினம் (22) ரொமேரோவிற்கு கால் மூட்டில் காயம் ஏற்பட்டது. இதனால் அணியில் இருந்து அவர் விலகியுள்ளார் என்று அர்ஜென்டினா கால்பந்து சங்கம் தெரிவித்துள்ளது.

அவருக்கான மாற்று வீரர் விரைவில் அறிவிக்கப்படவுள்ளார்.

ரொமேரோ அர்ஜென்டினா அணிக்காக 2010 மற்றும் 2014 உலகக் கோப்பைகளில் விளயைாடியுள்ளார்.

அர்ஜென்டினாவிற்காக 83 போட்டிகளில் களமிறங்கியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்