by Bella Dalima 24-05-2018 | 6:34 PM
Colombo (News 1st)
ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒத்துழைப்புடன் ஐக்கிய நாடுகள் சபையின் உணவு விவசாய ஸ்தாபனத்தின் உணவு விவசாய நிறுவனத்தால் மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட விவசாயத்தினூடாக வறுமையை ஒழிக்கும் அபிவிருத்தித் திட்டத்தின் முன்னேற்றங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் 46 கோடி ரூபா நிதியுதவியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் விவசாயத்தினூடாக வறுமையை ஒழிக்கும் அபிவிருத்தி திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.
கடந்த ஐந்து வருடமாக அமுல்படுத்தப்பட்ட இந்த விசேட திட்டத்தில் விவசாயம், கால்நடை உற்பத்தி, நன்னீர் மீன் வளர்ப்பு, சிறிய நீர்ப்பாசன அபிவிருத்தி உட்பட பல துறைகளில் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும், வாழ்வாதார மேம்பாட்டுத் திட்டங்களில் சுமார் 7000 குடும்பங்கள் பயனடைந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் செய்தி வௌியிட்டுள்ளது.
இந்தத் திட்டத்தில் பழப் பயிர்ச்செய்கை, கச்சான் உற்பத்தி, விதை நெல் உற்பத்தி, நன்னீர் மீன் வளர்ப்பு, சிறிய நீர்ப்பாசன புனருத்தாரணம், கருவாடு உற்பத்தி உட்பட பல துறைகளில் அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக திணைக்களம் விடுத்துள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.