சீரற்ற வானிலை காரணமாக 12 பேர் உயிரிழப்பு

சீரற்ற வானிலை காரணமாக 12 பேர் உயிரிழப்பு

by Staff Writer 24-05-2018 | 7:35 AM
COLOMBO (News 1st) நிலவுகின்ற சீரற்ற வானிலை காரணமாக 18 மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சீரற்ற வானிலை காரணமாக இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளதுடன் 105,352 பேர் பதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்தமுகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளார். களுகங்கையின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால் அதனால் களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள மக்கள் தற்காலிகமாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு கேட்டுகொள்ளப்பட்டுள்ளனர். இதேவேளை இரத்தினபுரியின் பல பகுதிகளில் தொடர்ந்தும் வௌ்ள நிலைமை காணப்படுவதாக எமது பிராந்திய செய்தியாளர்கள் தெரிவித்தனர். புத்தளம் சாலியவெவ வான்பாயுந்துள்ளது, இராஜாங்கனை நீர்தேக்கத்தின் வான் கதவு திறந்தமையே இதற்கு காரணம் என நீர்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. சாலியவெவ வான்பாய்தலிலனால் புத்தளம் வனாத்தவில்லாவ ஊடாக மன்னார் வீதி தொடர்ந்தும் நீரில் மூழ்கியுள்ளது.