இலட்சியக் கனவை நோக்கிய பயணம்

இலட்சியக் கனவை நோக்கிய பயணம்: எவரெஸ்ட்டின் உச்சி தொட்ட இரண்டாவது இலங்கையரின் அனுபவப் பகிர்வு

by Bella Dalima 24-05-2018 | 9:00 PM
Colombo (News 1st)  இலட்சியக் கனவுகளை நோக்கிப் பயணித்தால் இலக்கை எட்ட முடியும் என்கிறார் எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்த இரண்டாவது இலங்கையரான யொஹான் பீரிஸ். 29,029 அடி உயரம் கொண்ட எவரெஸ்ட் சிகரத்தில் சிங்கக் கொடியுடன் பயணித்த யொஹான் பீரிஸ் கடந்த செவ்வாய்க்கிழமை (22) நேபாள நேரப்படி காலை 5.55 அளவில் எவரெஸ்டின் உச்சியை அடைந்த இரண்டாம் இலங்கையராக வரலாற்றில் பதிவானார். தனது இந்த சவாலான பயணம் குறித்த அனுபவங்களை ஸ்போர்ட்ஸ் ஃபெஸ்டுடன் யொஹான் பீரிஸ் பகிர்ந்துகொண்டார்.
தேசியக் கொடியை உலகின் உயரமான மலைக்கு கொண்டு செல்லக் கிடைத்தமை குறித்து மிகுந்த பெருமைப்படுகிறேன். 2016 ஆம் ஆண்டு நான் ஜயந்தியுடன் இந்தப் பயணத்தை மேற்கொண்டேன். அப்போது ஜயந்தியால் வெற்றிபெற முடிந்தது. எனக்கு 400 மீற்றர் உயரம் எஞ்சியிருந்த போது எனது ஒட்சிசன் சிலிண்டரில் போதாமை ஏற்பட்டதால் திரும்ப வேண்டியதாயிற்று. ஆனால், இதனை எப்படியாவது அடைய வேண்டும் என்று நான் நினைத்துக்கொண்டேன். நம் எல்லோருக்கும் இலட்சியக் கனவுகள் இருக்கும். அதனை செய்ய முடியாது போகும் பட்சத்தில் கைவிடக்கூடாது. இலட்சியக் கனவுகளை நோக்கி பயணிக்க வேண்டும். அதனை ஒரு போதும் கைவிடக்கூடாது
என்கிறார் யொஹான் பீரிஸ்.