தூத்துக்குடி படுகொலையைக் கண்டித்து கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி படுகொலையைக் கண்டித்து கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி படுகொலையைக் கண்டித்து கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம்

எழுத்தாளர் Bella Dalima

24 May, 2018 | 7:12 pm

Colombo (News 1st) 

தமிழகம் – தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டமைக்கு கண்டனம் தெரிவித்து இன்று கிளிநொச்சில் இருவேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

தூத்துக்குடி படுகொலையைக் கண்டித்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கிளிநொச்சியில் கந்தசுவாமி ஆலய முன்றலில் கண்டனப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

இதேவேளை, வட – கிழக்கு புரட்சிகர சுயாதீன இளையோர் பேரவையினால் கிளிநொச்சி பேருந்து நிலைய முன்றலில் கண்டன ஆர்ப்பாட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், தூத்துக்குடியில் சுட்டுக்கொல்லப்பட்ட மக்களுக்கு புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சி ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துள்ளது.

அக்கட்சியின் தலைவர் கந்தசாமி இன்பராசா இன்று வௌியிட்ட ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்