by Staff Writer 24-05-2018 | 8:05 AM
COLOMBO (News 1st)
தொடரும் சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சக்தி சிரச நிவாரண யாத்திரை இன்று காலை ஆரம்பமாகவுள்ளது.
நிவாரண யாத்திரைக்கு சேகரிக்கப்பட்டுள்ள பொருட்களை ஏற்றிய வாகனங்கள் வரையறுக்கப்பட்ட கெப்பிட்டல் மகாராஜா நிறுவனத்தின் தலைமையக வளாகத்திலிருந்து இன்று காலை பயணத்தை ஆரம்பிக்கவுள்ளது.
அதற்கமைய சீரற்ற வானிலையால் அதிக பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ள பகுதிகளிலுக்கு முதற்கட்ட நிவாரண யாத்திரை முன்னெடுக்கப்படவுள்ளது.
சக்தி - சிரச நிவாரண யாத்திரைக்கு கடந்த 21 ஆம் திகதியில் இருந்து நிவாரணப் பொருட்கள் சேகரிக்கப்படுகின்றன.
பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவிக் கரம் நீட்டுவதற்கு அதிகளவிலான மக்கள் இணைந்து கொண்டனர்.
நிவாரண யாத்திரைக்கான பொருட்கள் மூன்று இடங்களில் சேகரிக்கப்பட்டன.
கொழும்பு-2, கெப்பிட்டல் மகாராஜா நிறுவன தலைமையக வளாகம்,
இரத்மலானை - ஸ்டெய்ன் கலையக வளாகம் மற்றும் தெபானம கலையக வளாகத்தில் பொருட்களை சேகரிக்கும் நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக அரிசி, பருப்பு, சீனி, நூடில்ஸ், ரின் மீன், பிஸ்கட், போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீர் மற்றும் சுகாதார/ மருத்துவ பொருட்களை கையளிக்க முடியும்.
மேலதிக தகவல்களுக்காக 077 2990542 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பினை ஏற்படுத்த முடியும்