வௌ்ளம் காரணமாக தொற்று நோய்கள் பரவும் அபாயம்

வௌ்ளம் காரணமாக தொற்று நோய்கள் பரவும் அபாயம்

by Staff Writer 23-05-2018 | 8:59 AM
COLOMBO (News 1st) வௌ்ள அனர்த்தம் ஏற்பட்டுள்ள பகுதிகளில் தொற்று நோய்கள் பரவுதற்கான நிலைமை காணப்படுவதால் மக்களை அவதானமாக செயற்படுமாறு பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவிக்கின்றது. வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு சமைத்த உணவை வழங்குவது பொருத்தமானது என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் நாயகம் மகேந்திர பாலசூரிய தெரிவித்துள்ளார். வௌ்ள அனர்த்த பகுதியில் இருந்து உற்பத்தி செய்யப்படும் தானியங்களை உட்கொள்வதில் அவதானமாக செயற்படுமாறும் ​பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. நுகர்வுக்கு ஒவ்வாத உணவு விநியோகிக்கப்படுகின்றதா என்பது தொடர்பில் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகவு பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் நாயகம் மகேந்திர பாலசூரிய குறிப்பிடுகின்றார்.