M.H.M. நவவி இராஜினாமா செய்யவுள்ளார்

பாராளுமன்ற உறுப்பினர் M.H.M. நவவி இராஜினாமா செய்யவுள்ளார்

by Bella Dalima 23-05-2018 | 7:12 PM
Colombo (News 1st)  அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் புத்தளம் மாவட்ட தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் M.H.M. நவவி எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு முன்னர் பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து இராஜினாமா செய்யவுள்ளதாக அந்தக் கட்சியின் செயலாளர் தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் M.H.M. நவவி தனது சொந்த விருப்பத்தின் பேரில் பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செயலாளர் எஸ்.சுபைர்தீன் நியூஸ்ஃபெஸ்ட்டிற்கு தெரிவித்தார். மற்றுமொருவருக்கு சந்தர்ப்பம் வழங்குவதாக வழங்கியிருந்த உறுதிமொழியைக் காப்பாற்றும் வகையில், அவர் அந்த தீர்மானத்திற்கு வந்துள்ளதாகவும் அது தொடர்பில் அவர் கட்சியின் உயர்பீடத்திற்கு அறிவித்துள்ளதாகவும் கட்சியின் செயலாளர் குறிப்பிட்டார். அந்த வெற்றிடத்திற்கு யார் நியமிக்கப்படவுள்ளார் என்பது தொடர்பில் இதுவரை தீர்மானிக்கப்படவில்லை எனவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செயலாளர் கூறினார்.