நிவாரணம் வழங்குவற்கு 1850 படையினர் தயார் நிலையில்

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்காக 1850 இராணுவத்தினர் தயார் நிலையில்

by Staff Writer 22-05-2018 | 12:55 PM
COLOMBO (News 1st) எதிர்வரும் நாட்களிலும் மழையுடனான வானிலை நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. சப்ரகமுவ, தென், மேல், மற்றும் வடமேல் மாகாணங்களில் 75 மில்லிமீற்றர் வரை மழை பெய்யக்கூடும் என திணைக்களம் தெரிவித்து்ளளது. இன்று அதிகாலை வரையான காலப்பகுதிக்குள் அதிக மழைவீழ்ச்சி இறம்பொட பகுதியில் பதிவாகியுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது. இறம்பொட பகுதியில் 112 மில்லிமீற்றர் வரை மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. குருநாகலில் 91 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சியும், பொல்கொல்ல பகுதியில் 84 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சியும், காசல்ரீ பகுதியில் 76 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சியும், பதிவாகியுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது. இதேவேளை அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்காக மேலதிகமாக 1850 படையினர் தயார் நிலையிலுள்ளதாக பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது இராணுவத்தினர் 1000 பேரும் கடற்படையினர் 600 பேரும் விமான படையினர் 250 பேரும் தயார் நிலையிலுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்கும் வகையில் 170 பேரை அந்தந்த பகுதிகளுக்கு அனுப்பியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும் நிலவும் அசாதாரன வானிலையைத் தொடர்ந்து கண்டி - தவுலகல பொலிஸ் நிலையத்தை அண்மித்து மண்சரிவு இடம்பெற்றுள்ளது. புனரமைக்கப்பட்டு வரும் தவுலகல - வடதெனிய பிரதான வீதியில் மேல்பிரிவில் இவ்வாறு மண்சரிவு ஏற்பட்டுள்ளது வீதி புனரமைப்பு தாமதமாகியமையால் இந்த மண்சரிவு இடம்பெற்றுள்ளதாக பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் தவுலகல - வடதெனிய வீதியின் போக்குலரத்து பூரணமாக தடைப்பட்டுள்ளது.