முழுவீச்சில் தயாராகிறது மெக்‌ஸிக்கோ

உலகக்கிண்ண கால்பந்தாட்டம் - முழுவீச்சில் தயாராகிறது மெக்‌ஸிக்கோ

by Staff Writer 22-05-2018 | 11:43 AM
COLOMBO (News 1st) 2018 ஆம் ஆண்டு உலகக்கிண்ண கால்பந்தாட்டத்தொடர் பற்றிய ஆர்வம் ரசிகர்களிடத்தில் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் உலகக்கிண்ண கால்பந்தாட்டத்தொடருக்கான மெக்ஸிக்கோ குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. 2018 ஆம் ஆண்டு உலகக்கிண்ண கால்பந்தாட்டத்தொடர் ரஷ்யாவில் நடைபெறவுள்ளது. அடுத்த மாதம் 14 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள கால்பந்தாட்டத் தொடர் ஜூலை மாதம் 15 ஆம் திகதி வரை நீடிக்கவுள்ளது. இந்நிலையில் உலகக்கிண்ண கால்பந்தாட்டத் தொடருக்கான மெக்ஸிக்கோ குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. தொடரில் மெக்ஸிக்கோ எப் குழுவில் இடம்பெற்றுள்ளதோடு சுவீடன் ஜேர்மனி மற்றும் தென்கொரிய அணிகள் அந்த குழுவில் விளையாடுகின்றன. மெக்ஸிக்கோ அணி தனது முதல் போட்டியில் ஜேர்மனியை சந்திக்கவுள்ளதோடு , அந்தப்போட்டி அடுத்த மாதம் 17 ஆம் திகதி நடைபெறவுள்ளது.