வானிலை முன்னெச்சரிக்கை

வானிலை முன்னெச்சரிக்கை

by Staff Writer 21-05-2018 | 3:49 PM
மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மாத்தறை மற்றும் மாவட்டங்களில் 150 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இன்று காலை 8.30 உடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் ஆனமடுவ பகுதியிலேயே அதிக மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. புத்தளம் - ஆனமடுவ பகுதியில் 353 தசம் 8 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. ஆண்டிகம - 339 மில்லி மீற்றர் தமன்கடுவ - 316 மில்லி மீற்றர் மாத்தளை - 267.5 மில்லி மீற்றர் இரத்தினபுரி, துடுவ - 232.6 மில்லி மீற்றர் குளியாப்பிட்டிய - 232 மில்லி மீற்றர் குக்குளேகங்க - 227 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.   இடம்பெயர்வு மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் அக்கரப்பத்தனை - அல்தோரி தோட்டத்திலுள்ள 10 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். நேற்று இரவு முதல் பெய்து வரும் மழை காரணமாக அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை 3 மணியளவில் 2 வீடுகள் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். இதனையடுத்து 2 குடும்பங்களை சேர்ந்த 10 பேரும் அல்தோரி தோட்டத்திலுள்ள பொதுநூலகமொன்றில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். போக்குவரத்து பாதிப்பு மண்மேடு சரிந்து வீழ்ந்ததால் ஹற்றன் - கொழும்பு பிரதான வீதியில் கித்துல்கல, யட்டிபேரிய மற்றும், கினிகத்தேன - தியகல ஆகிய பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூறு. மாற்றுவீதிகளை பயன்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாவலப்பிட்டி - தொலஸ்பாகை வீதியின் வெரலுகஸ்ஹின்ன பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் அப்பகுதியூடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.