உதவிகளை உடனடியாக வழங்குமாறு ஜனாதிபதி ஆலோசனை

பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை உடனடியாக வழங்குமாறு ஜனாதிபதி ஆலோசனை

by Staff Writer 21-05-2018 | 4:02 PM
சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்க துரித நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆலோசனை வழங்கியுள்ளார். நிதி ஒதுக்கீட்டை பிரச்சினையாக முன்னிறுத்தாது, அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள அனைத்து நிவாரணங்களையும் கவனத்திற் கொண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. வௌ்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளவர்களை மீட்பதற்கு இலங்கை இராணுவத்தினரை உதவுமாறும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மக்களுக்கு தேவையான நலன்புரி உதவிகளை தொடர்ந்தும் முன்னெடுக்குமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.