8 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

8 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

by Bella Dalima 20-05-2018 | 8:29 PM
Colombo (News 1st)  நிலவும் பலத்த மழையுடன் கூடிய வானிலையால் 8 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்படுவதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய களுத்துறை, கேகாலை, இரத்தினபுரி, நுவரெலியா, பதுளை, காலி, குருணாகல் மற்றும் கொழும்பு ஆகிய மாவட்டங்களுக்கே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, சப்ரமுவ மாகாணத்தில் 150 மில்லிமீட்டருக்கும் அதிக மழை பெய்யலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல், மத்திய , ஊவா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில பகுதிகளில் 100 மில்லிமீட்டர் மழை பெய்யலாம் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.