மக்கள் சக்தி திட்டத்திற்கு விருது

சர்வதேச லயன்ஸ் கழகத்தினால் மக்கள் சக்தி திட்டத்திற்கு விருது

by Bella Dalima 20-05-2018 | 8:45 PM
Colombo (News 1st)  சர்வதேச லயன்ஸ் கழகத்தின் மாவட்டம் 306 C இரண்டாம் குழுவின் 13 ஆவது சம்மேளனம் அலரி மாளிகையில் நேற்று (19) மாலை நடைபெற்றது. இதன்போது, மக்களுடன் இணைந்து மக்களுக்காக ஆற்றிய சேவையைப் பாராட்டி மக்கள் சக்தி திட்டத்திற்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. 13 ஆவது வருடாந்த சம்மேளத்தில் சர்வதேச லயன்ஸ் கழகத்தின் முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொண்டனர். இலத்திரனியல் ஊடகம் மற்றும் பல்வேறு தனிநபர்கள் நாட்டில் ஆற்றிய சமூக சேவைகள் இதன்போது பாராட்டைப் பெற்றன. மஹரகம அபேக்ஷா வைத்தியசாலைக்கு ஸ்கேன் இயந்திரத்தைப் பெற்றுக்கொடுப்பதற்கு முன்நின்ற, எம்.எஸ்.எச். மொஹமட் மற்றும் பேராசிரியர் காலோ பொன்சேகா ஆகியோர் இதன்போது விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர். 306 C இரண்டாம் குழுவின் தலைவர் அசேல கருணாவர்தன உள்ளிட்ட சர்வதேச லயன்ஸ் கழகத்தின் பிரதிநிதிகளும் இதன்போது பிரசன்னமாகியிருந்தனர். இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக, லயன்ஸ் கழகத்தின் 306 C இரண்டாம் குழுவின் முன்னாள் ஆளுனர் மகேந்திர அமரசூரிய கலந்துகொண்டிருந்தார். இலங்கையின் கிராம மக்களை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்பட்ட மக்கள் சக்தி திட்டத்திற்கும் இதன் போது விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. மக்கள் சக்தி திட்டம் சார்பாக நியூஸ்ஃபெஸ்ட் பணிப்பாளர், பொது முகாமையாளர் யசரத் கமல்சிறி மற்றும் மக்கள் சக்தி செயலகத்தின் பிரதிநிதிகள் விருதினைப் பெற்றுக்கொண்டனர்.