கிரீஸில் ஆளுநர் மீது பொதுமக்கள் தாக்குதல்

கிரீஸில் ஆளுநர் மீது பொதுமக்கள் தாக்குதல்

by Bella Dalima 20-05-2018 | 5:52 PM
கிரீஸின் தசலோனிகி நகர ஆளுநரை பொதுமக்கள் சிலர் கூட்டாக சேர்ந்து தாக்கியுள்ளனர். அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 75 வயதான யானில் போட்டரிஸ், தசலோனிகி நகர ஆளுநராகவுள்ளார். இவர் தேசியவாத எதிர்ப்புக்கொள்கை கொண்டவர். முதலாம் உலகப் போரில் துருக்கியர்களால் கொல்லப்பட்ட கிரேக்க இனத்தவர்களை நினைவுக்கூரும் நிகழ்வு அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் கலந்துகொள்வதற்காக ஆளுநர் தசலோனிகி சென்றுள்ளார். இதன்போது, அவரை அங்கு கூடியிருந்த தேசியவாதிகள் சிலர் தாக்கியுள்ளனர். இதுபற்றி கிரேக்க பிரதமர் அலெக்ஸிஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆளுநரைத் தாக்கியவர்களை தீவிர வலதுசாரிகள் என்று வர்ணித்துள்ளார். மேலும், தாக்குதலுடன் சம்பந்தப்பட்டவர்கள் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் எச்சரித்துள்ளார். கிரேக்கத்தை ஆளும் இடதுசாரி சிரிஸா கட்சி இதனை பாசிச செயல் என்று வர்ணித்துள்ளது.