by Bella Dalima 20-05-2018 | 8:07 PM
Colombo (News 1st)
இலங்கை மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரை இரண்டு போட்டிகளாக மட்டுப்படுத்துவது தொடர்பில் மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் நிறுவனம் கவனம் செலுத்தியுள்ளது.
எனினும், இது தொடர்பில் மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் நிறுவனம் தமக்கு உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கவில்லை என இலங்கை அணியின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஆஷ்லி டி சில்வா குறிப்பிட்டார்.
இலங்கை அணி இறுதியாக 2008 ஆம் ஆண்டிலேயே மேற்கிந்தியத் தீவுகளுக்கான கிரிக்கெட் விஜயத்தை மேற்கொண்டிருந்தது.
இரு அணிகளுக்குமிடையிலான 03 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 6 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
எனினும், மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் நிறுவனம் எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக இந்தத் தொடரை 02 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடராக நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.