கிசுகிசுக்கள் வருவது நல்லதுதான்: அமலா பால்

கிசுகிசுக்கள் வருவது நல்லதுதான்: அமலா பால்

கிசுகிசுக்கள் வருவது நல்லதுதான்: அமலா பால்

எழுத்தாளர் Bella Dalima

20 May, 2018 | 6:36 pm

கிசுகிசுக்கள் வருவது நல்லதுதான் என்று நடிகை அமலா பால் கூறியுள்ளார்.

விவாகரத்திற்கு முன்னும் சரி பின்னும் சரி அமலாபால் பற்றி கிசுகிசுக்கள் வந்துகொண்டேதான் இருக்கின்றன.

அதை எல்லாம் அவர் படிக்கிறாரா இல்லையா என்று சந்தேகப்படும் அளவுக்கு கவலைப்படாமல் உற்சாகமாக இருக்கிறார்.

அவரிடம் அண்மையில் இதுபற்றி கேட்கப்பட்டது. அதற்கு அவர்,

நான் கிசுகிசுக்கள் மீது பெரிதாக கவனம் செலுத்துவதில்லை. ஆனால் நம்மைப் பற்றி கிசுகிசுக்கள் வருவது நல்லதுதான். பொதுவாக இரண்டு விதமாக கிசுகிசுக்கள் வரும். ஒன்று நாம் தவறான பாதையில் சென்று கொண்டிருக்கிறோம் என கூறுவார்கள். மற்றொன்று நாம் சரியான பாதையில் செல்கிறோம் என சொல்வார்கள். இப்போது நல்ல பாதையில் போவதாக தான் கிசுகிசுக்கள் வருகின்றன. அதனால் அதை மாற்ற வேண்டிய கட்டாயம் இல்லை. அதே நேரத்தில் நாம் செய்வது தவறு என கூறும் போது, அது உண்மையாக இருக்கும் பட்சத்தில், என் தவறை நான் திருத்திக்கொள்வேன். சும்மா வேடிக்கையாக வரும் கிசுகிசுக்களை நானும் அப்படியே வேடிக்கையாக எடுத்துக்கொள்வேன்

என்று பதிலளித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்