யாழில் சரிவர தொழிற்படாத சமிக்ஞை கட்டமைப்புகள்

யாழில் சரிவர தொழிற்படாத சமிக்ஞை கட்டமைப்புகள்: அதிகரித்து வரும் வீதி விபத்துகள்

by Bella Dalima 19-05-2018 | 7:26 PM
Colombo (News 1st)  யாழ். போதனா வைத்தியசாலையின் தரவுகளுக்கமைய, இந்த வருடத்தின் முதல் மூன்று மாதங்களில் 951 வீதி விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன. இவற்றில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். 17 வீதமான வீதி விபத்துக்கள் வீதி சமிக்ஞை சரிவர இயங்காமையால் நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. யாழ். மாவட்டத்திலுள்ள வீதி சமிக்ஞை கட்டமைப்புக்களின் நிலை குறித்து நியூஸ்ஃபெஸ்ட் இன்று ஆராய்ந்தது. இதன்போது, வாகனங்கள் திரும்புவதற்கான பச்சை சமிக்ஞையும் பாதசாரிகள் வீதியைக் கடப்பதற்கான பச்சை சமிக்ஞையும் ஒரே நேரத்தில் தொழிற்பட்டதை அவதானிக்க முடிந்தது. இதேவேளை, பாதசாரிகள் கடவை சில இடங்களில் தௌிவாகத் தென்படாமையையும் அவதானிக்க முடிந்தது. இந்த விடயம் தொடர்பில் வட மாகாண சபையிலும் அண்மையில் பிரஸ்தாபிக்கப்பட்டிருந்தது. இது பற்றி வீதி அபிவிருத்தி அதிகார சபையின் யாழ். பிராந்திய தலைமை பொறியியலாளர் வி.சுதாகரிடம் வினவியபோது,  யாழ். மாவட்டத்திற்கான வீதி விளக்கு சமிக்ஞை அவ்வாறே வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் இது குறித்த அறிவுறுத்தல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.  

ஏனைய செய்திகள்