சீனாவின் கடன் பொறி: மொஹமட் நஷீட் விளக்கம்

சீனாவின் கடன் பொறி: மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீட் விளக்கம்

by Bella Dalima 19-05-2018 | 8:44 PM
சீனாவின் கடன் பொறி, அதனால் நாடுகள் எதிர்நோக்க நேரிட்டுள்ள அழுத்தங்கள் தொடர்பில் மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீட் கருத்து வௌியிட்டார். நியூஸ்ஃபெஸ்ட்டிற்கு இன்று வழங்கிய விசேட செவ்வியில் அவர் பின்வருமாறு கூறினார்.
தமது கொள்கைகளை நடைமுறைப்படுத்தக்கூடிய ஆட்சியாளர்களை நியமிக்கும் செயற்பாட்டில் சீனா முதலில் ஈடுபடும். நாடொன்றில் ஜனநாயக முறை நீக்கப்படும் போது, விலை மனுவின்றி நினைத்தவாறு ஒப்பந்தங்களை பெற்றுக்கொள்ள முடியும். எவ்வித போட்டியுமின்றி விலை மனுவைப் பெற்றுக்கொள்கின்றனர். அதன் பின்னர் விலைகளை அதிகரிப்பார்கள். உதாரணமாக 100 மில்லியன் டொலர்களில் நிர்மாணிக்கக்கூடிய வீதிகள் மற்றும் பாலங்களுக்காக 300 மில்லியன் டொலர்களை நிர்ணயிப்பார்கள். எனினும், 100 மில்லியன் செலவிலேயே அந்த நிர்மாணப்பணிகளை முன்னெடுத்திருப்பார்கள். அவர்களின் வங்கிகளில் எவ்வித அச்சமுமின்றி கடன் வழங்கப்படுகின்றது. அந்தக் கடனை அரசாங்கத்திற்கு செலுத்த முடியாத நிலை ஏற்படும். 100 மில்லியன் பெறுமதியான ஒன்றிற்காக 300 மில்லியன் ரூபா கடனை எவ்வாறு செலுத்த முடியும்? அந்த சந்தர்ப்பத்திலேயே கடன் பொறியில் சிக்குவார்கள். அதன்போது சொத்துகள் கையகப்படுத்தப்படும். ஒரு துப்பாக்கிச் சூடேனுமின்றி, அடிபணிபவர்களின் ஊடாக அதிகளவான காணிகளைக் கையகப்படுத்துவார்கள்.