கிரிக்கெட் நிறுவனத் தேர்தலுக்கு குழு நியமனம்

கிரிக்கெட் நிறுவனத் தேர்தலுக்கு 5 பேர் கொண்ட குழு நியமனம்

by Bella Dalima 19-05-2018 | 8:28 PM
Colombo (News 1st)  இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தல் எதிர்வரும் 31 ஆம் திகதி நடைபெறவுள்ளது. கிரிக்கெட் நிறுவனத் தேர்தலுக்கு 05 பேர் கொண்ட குழு இன்று நியமிக்கப்பட்டது. இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் இன்று பிற்பகல் நடைபெற்ற விசேட பொதுக்குழு கூட்டத்தின் போது இந்த தீர்மானம் எட்டப்பட்டது. அதன் பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தலைவர் திலங்க சுமதிபால பின்வருமாறு கருத்துத் தெரிவித்தார்.
கிரிக்கெட் நிறுவனத் தேர்தலுக்கான 05 பேர் கொண்ட குழு இன்று நியமிக்கப்பட்டது. விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தபா இதற்கான உத்தரவை விடுத்துள்ளார். கிரிக்கெட் நிறுவனத்தின் பொதுக்குழு கூட்டத்தை மே மாதம் 31 ஆம் திகதி நடத்த உத்தரவிட்டுள்ளார். அதனால் கூட்டத்தை 31 ஆம் திகதி நடத்தவுள்ளோம். எனவே, பொதுக்குழு கூட்டத்திலே தேர்தலை நடத்தி புதிய உறுப்பினர்களை தெரிவு செய்யவுள்ளோம். ரஷிக்க வீரதுங்க, கொமடோர் சனத் உத்பல, புத்திக்க இலங்க திலக்க, ஜூட் பெரேரா மற்றும் தேவகிரி பண்டார உள்ளிட்டோரையே இன்று நாம் நியமித்தோம். வெற்றி தொடர்பில் எனக்கு எவ்வித சந்தேகமும் இல்லை. இலங்கையில் 84 விளையாட்டு சங்கங்கள் உள்ளன. அந்த 84 இல் 64 பேர் தலைவர் பதவிக்கு என்னை முன்மொழிந்துள்ளனர்.