இளவரசர் ஹரி – மேகன் மேர்க்கல் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது

இளவரசர் ஹரி – மேகன் மேர்க்கல் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது

இளவரசர் ஹரி – மேகன் மேர்க்கல் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது

எழுத்தாளர் Bella Dalima

19 May, 2018 | 5:49 pm

இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் – டயானா தம்பதியின் இளைய மகன் ஹரிக்கும் (33) மேகன் மேர்க்கலுக்கும் (36) இன்று விண்ட்சோர் நகரில் உள்ள புனித ஜோர்ஜ் தேவாலயத்தில் திருமணம் நடைபெற்றது.

திருமணத்தில் மணமகள் மேகன் மேர்க்கலின் தந்தை தாமஸ் பங்கேற்கவில்லை. சமீபத்தில் தான் அவருக்கு இருதய சத்திரசிகிச்சை நடைபெற்றது. அதனால் ஹரியின் தந்தையும், இளவரசருமான சார்லஸ் மணமகள் மேகனுக்கும் தந்தை ஸ்தானத்தில் இருந்து திருமணத்தை நடத்தி வைத்தார்.

இளவரசர் ஹரியின் பாட்டி ராணி எலிசபெத், அண்ணன் வில்லியம் அவரது மனைவி கேத் மிடில்டன், அத்தம்பதியின் குழந்தைகள் உள்ளிட்ட அரச குடும்பத்தினர் திருமணத்தில் பங்கேற்றிருந்தனர்.

இவர்கள் தவிர, திருமண விழாவில் பங்கேற்க 600 விருந்தினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

மேலும் 2,640 பொதுமக்களும் அழைக்கப்பட்டிருந்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்