ஹவாய் தீவில் எரிமலை வெடித்துச் சிதறல்

ஹவாய் தீவில் எரிமலை வெடித்துச் சிதறல்: 37 வீடுகள் சேதம்

by Bella Dalima 18-05-2018 | 6:03 PM
ஹவாய் தீவுகளின் ஹோனோலுலு பகுதியில் உள்ள கிலுயுயே எரிமலை வெடித்துச் சிதறியதில் 37 வீடுகள் சேதமடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹவாய் தீவுகளின் ஹோனோலுலு பகுதியில் உள்ள கிலுயுயே எரிமலையில் நேற்று வெடிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக நெருப்புடன் கூடிய புகை வெளியேறி வருகிறது. சுமார் 6 மைல் உயரத்திற்கு புகை பரவியுள்ளது. மேலும், பல மீட்டர் தூரத்திற்கு எரிமலைக்குழம்பு பரவியுள்ளது. இந்த எரிமலை வெடிப்பினால் அப்பகுதியில் உள்ள 37 வீடுகள் சேதமடைந்திருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், எரிமலைக் குழம்புகள் அப்பகுதி முழுவதும் ஆக்கிரமித்த வண்ணம் உள்ளதால், அப்பகுதியில் வசிக்கும் 2000-க்கும் மேற்பட்ட மக்களை பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், சுற்றுலாப் பயணிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 4 ஆம் திகதியும் இந்த எரிமலை வெடித்துச் சிதறியமை குறிப்பிடத்தக்கது.