பெரிய வெங்காய செய்கைக்கு ஏக்கருக்கு 9000 மானியம்

பெரிய வெங்காய செய்கைக்காக ஒரு ஏக்கருக்கு தலா 9000 ரூபா மானியம் வழங்க நடவடிக்கை

by Bella Dalima 18-05-2018 | 4:56 PM
பெரிய வெங்காய செய்கைக்கு ஏக்கருக்கு 9000 ரூபா மானியம் Colombo (News 1st)  பெரும்போகத்திற்கான பெரிய வெங்காய விதைகளை செய்கையாளர்களிடமிருந்து கொள்வனவு செய்வதற்கு விவசாய அமைச்சு திட்டமிட்டுள்ளது. இதற்காக 47.3 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதேவேளை, பெரிய வெங்காய செய்கைக்காக ஒரு ஏக்கருக்கு தலா 9000 ரூபா மானியத்தைப் பெற்றுக்கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், 40 ஆயிரம் ரூபா காப்புறுதி, உர மானியம் என்பனவும் வழங்க விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது.