அர்ஜூன் அலோசியஸின் மேன்முறையீடு பரிசீலனை 

அர்ஜூன் அலோசியஸின் மேன்முறையீட்டு மனுவை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளுமாறு உத்தரவு

by Bella Dalima 18-05-2018 | 4:18 PM
Colombo (News 1st)  பிணை வழங்குமாறு கோரி பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஷ் நிறுவனத்தின் தலைவர் அர்ஜூன் அலோசியஸ் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவை எதிர்வரும் 25 ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள இன்று உத்தரவிடப்பட்டது. மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர், நீதிபதி பத்மன் சூரசேன மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய நீதிபதிகள் முன்னிலையில் இன்று குறித்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேன்முறையீட்டை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்ட நீதிபதிகள் குழாம் முன்னிலையில் அந்த மனுவை மீண்டும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளுமாறு மனுதாரர் தரப்பு சட்டத்தரணிகள் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குற்றப்புலனாய்வு பிரிவினரால் கடந்த பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி கைது செய்யப்பட்ட அர்ஜுன் அலோசியஸிற்கு பிணை வழங்குமாறு கோரி கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் மற்றும் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. நீதிமன்றத்தால் பிணை மனு நிராகரிக்கப்பட்டதை இரத்து செய்யுமாறு கோரியும், தனக்கு பிணை வழங்குமாறு கோரியும் அர்ஜூன் அலோசியஸ் மேன்முறையீடு செய்துள்ளார்.

ஏனைய செய்திகள்