11 இளைஞர்கள் கடத்தல்: கடற்படையின் லெப்டினன்ட் கமாண்டர் ஒருவருக்கு சிவப்பு எச்சரிக்கை விடுப்பு 

11 இளைஞர்கள் கடத்தல்: கடற்படையின் லெப்டினன்ட் கமாண்டர் ஒருவருக்கு சிவப்பு எச்சரிக்கை விடுப்பு 

11 இளைஞர்கள் கடத்தல்: கடற்படையின் லெப்டினன்ட் கமாண்டர் ஒருவருக்கு சிவப்பு எச்சரிக்கை விடுப்பு 

எழுத்தாளர் Bella Dalima

17 May, 2018 | 3:49 pm

Colombo (News 1st) 

2008 ஆம் ஆண்டு கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் கடற்படையின் லெப்டினன்ட் கமாண்டர் ஒருவருக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான வழக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச பொலிஸாரின் ஊடாக இந்த உத்தரவை அமுல்படுத்துமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

சந்தேகநபரான லெப்டினன்ட் கமாண்டர் நாட்டிலிருந்து தப்பிச்சென்றிருந்தால் அவருக்கு உதவி புரிந்தவர்கள் யார் என்பதை கண்டறிந்து அவர்களை கைது செய்யுமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

கடல் மார்க்கமாக தப்பிச்சென்றிருப்பின், அதற்கு கடற்படையினர் உதவி புரிந்திருப்பின் சம்பந்தப்பட்டவர்களையும் கைது செய்யுமாறு நீதவான் லங்கா ஜயரத்ன உத்தரவிட்டுள்ளார்.

மேலும், சம்பவம் தொடர்பில் ஏற்கனவே கைது செய்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இரண்டு சந்தேகநபர்களையும் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

2008 ஆம் ஆண்டு கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் வௌ்ளை வேனை பயன்படுத்தி 11 இளைஞர்கள் கடத்தப்பட்ட பின்னர் காணாமல் ஆக்கப்பட்டனர்.

சம்பவம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கிற்கு அமைய, கடற்படையின் முன்னாள் பேச்சாளர் உள்ளிட்ட கடற்படை வீரர்கள் பலர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்