கொங்கோ குடியரசில் எபோலா வைரஸ் தொற்று அதிகரிப்பு

கொங்கோ குடியரசின் பண்டகாவில் எபோலா வைரஸ் தொற்று அதிகரிப்பு

by Bella Dalima 17-05-2018 | 4:36 PM
கொங்கோ குடியரசின் வட மேற்கு நகரான பண்டகாவில் (Mbandaka) எபோலா வைரஸ் தொற்று அதிகரித்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த பகுதியில் பல மில்லியன் மக்கள் வசித்து வருகின்றனர். பண்டகாவின் (Mbandaka) கிராமப்பகுதியில் முதன்முறையாக எபோலோ வைரஸ் கண்டறியப்பட்டதிலிருந்து, இதுவரை 23 பேர் நோய்த்தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளனர். பண்டகாவிற்கு உலக சுகாதார ஸ்தாபனத்தால் எபோலா தடுப்பு மருந்துகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.