சீனி மீது விதிக்கப்பட்டுள்ள விசேட வர்த்தக வரியை அதிகரிக்குமாறு இறக்குமதியாளர்கள் கோரிக்கை

சீனி மீது விதிக்கப்பட்டுள்ள விசேட வர்த்தக வரியை அதிகரிக்குமாறு இறக்குமதியாளர்கள் கோரிக்கை

சீனி மீது விதிக்கப்பட்டுள்ள விசேட வர்த்தக வரியை அதிகரிக்குமாறு இறக்குமதியாளர்கள் கோரிக்கை

எழுத்தாளர் Bella Dalima

17 May, 2018 | 5:09 pm

Colombo (News 1st) 

இறக்குமதி செய்யப்படும் சீனி மீது விதிக்கப்பட்டுள்ள விசேட வர்த்தக வரியை அதிகரிக்குமாறு சீனி இறக்குமதியாளர்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எவ்வாறாயினும், இந்த கோரிக்கையை வாழ்க்கைச் செலவு குழு நிராகரித்துள்ளதாக அக்குழுவின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

தற்போது இறக்குமதி செய்யப்படும் சீனிக்கான விசேட வர்த்தக வரி 31 ரூபாவாகக் காணப்படுகின்றது.

கடந்த வருடம் ஆகஸ்ட் மாதத்திலிருந்து சர்வதேச சந்தையில் சீனி ஒரு கிலோகிராமிற்கான விலை 10 ரூபாவால் வீழ்ச்சியடைந்துள்ளது.

மேலும், பாரிய அளவில் இறக்குமதி செய்யப்பட்ட சீனி களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்