by Bella Dalima 16-05-2018 | 9:12 PM
Colombo (News 1st)
புனித ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை நாட்டின் எந்தவொரு பகுதியிலும் தென்படாமையால், நாளை மறுதினம் (18) ரமழான் நோன்பு ஆரம்பமாகும் என கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.
இன்று மாலை கூடிய பிறை குழு கூட்டத்தின் போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக கொழும்பு பெரிய பள்ளிவாசலின் பிரதம இமாம் எம்.எஸ்.எம். தஸ்லிம் நியூஸ்பெஸ்ட்டிற்கு தெரிவித்தார்.