நீர் கட்டணம் அதிகரிக்கும் நிலை

நீர் கட்டணம் அதிகரிக்கும் நிலை

by Staff Writer 16-05-2018 | 1:33 PM
COLOMBO (News 1st) நீர்க் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பிலான யோசனை இந்த வாரத்தில் கூடவுள்ள பொருளாதார முகாமைத்துவ குழுவில் முன்வைக்கப்படவுள்ளதாக நீர்வழங்கல் மற்றும் நகர திட்டமிடல் அமைச்சு தெரிவித்துள்ளது. நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் பரிந்துரைக்கமைய கட்டண அதிகரிப்பு யோசனை முன்வைக்கப்படவுள்ளதாக அமைச்சின் செயலாளர் வசந்த ஹப்புஆராச்சி தெரிவித்துள்ளார். 2012 இற்கு பின்னர் நீர்ப்பட்டியலுக்கான கட்டணங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவில்லையென தெரிவித்த அவர் நீரை சுத்திகரித்து பகிர்ந்தளிப்பதற்கு தேவையான அனைத்து பொருட்களினதும் விலைகள் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார். இதற்கிணங்க, இன்று பொருளாதார முகாமைத்துவ குழுவில் முன்வைக்கப்படவுள்ள யோசனைக்கு கிடைக்கும் அனுமதிக்கமைய நீர்க் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பிலான அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பிக்கவுள்ளதாக அவர் கூறியுள்ளார். இதேவேளை, நீர்க் கட்டணம் அதிகரிக்கப்படாமையினால் நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை கடுமையான நிதி நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாக நீர் வழங்கல் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.