தனியார் பஸ்களின் பணிப்பகிஷ்கரிப்பு இரத்து: பஸ் கட்டணம் 12.5 வீதத்தால் அதிகரிப்பு
by Bella Dalima 16-05-2018 | 6:39 PM
Colombo (News 1st)
இன்று நள்ளிரவு முதல் ஆரம்பிக்கப்படவிருந்த தனியார் பஸ்களின் பணிப்பகிஷ்கரிப்பு இரத்து செய்யப்பட்டுள்ளது.
போக்குவரத்து அதிகாரிகளுக்கும் தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்திற்கும் இடையில் இன்று மாலை நடைபெற்ற கலந்துரையாடலின் போது தீர்வு எட்டப்பட்டுள்ளது.
இதன் போது 12.5 வீதத்தினால் பஸ் கட்டணத்தை அதிகரிப்பதற்கும், குறைந்தபட்ச கட்டணத்தை 12 ரூபாவாக அதிகரிப்பதற்கும் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பிலான பிரேரணையை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை அமைச்சரவைக்கு சமர்ப்பித்து அனுமதி பெறுவதற்கு உத்தேசித்துள்ளதாக பிரதி அமைச்சர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார்.