by Staff Writer 16-05-2018 | 10:26 AM
இந்தியாவின் வாரணாசியில் மேம்பாலம் இடிந்து வீழ்ந்ததில் 18 பேர் உயிரிழந்துள்ளனர்.
கட்டுமானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுவரும் மேம்பாலத்தின் ஒரு பகுதியே இவ்வாறு இடிந்து வீழ்ந்துள்ளது.
இடிபாடுகளுக்குள் இருந்து 18 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தேசிய அனர்த்த நிவாரணப் படை தெரிவித்துள்ளது.
தொடர்ந்தும் மீட்பு பணிகள் இடம்பெற்று வருவதாகவும் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களின் எண்ணிக்கை தொடர்பில் இன்னும் தெரியவரவில்லை எனவும் இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், குறித்த மேம்பாலத்தின் கீழ் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களுக்கும் பெருமளவில் சேதம் ஏற்பட்டுள்ளதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.