”நடிகைகளின் வாழ்க்கை வரலாறு படங்களில் இனி நடிக்க மாட்டேன்” – கீர்த்தி சுரேஷ்

”நடிகைகளின் வாழ்க்கை வரலாறு படங்களில் இனி நடிக்க மாட்டேன்” – கீர்த்தி சுரேஷ்

”நடிகைகளின் வாழ்க்கை வரலாறு படங்களில் இனி நடிக்க மாட்டேன்” – கீர்த்தி சுரேஷ்

எழுத்தாளர் Staff Writer

16 May, 2018 | 10:55 am

பழம்பெரும் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்த கீர்த்தி சுரேஷ், இனிமேல் இதுபோன்று நடிகைகளின் வாழ்க்கை படத்தில் நடிக்க மாட்டேன் என்று கூறியிருக்கிறார்.

நடிகை கீர்த்தி சுரேஷ் சாவித்திரி வேடத்தில் நடத்த நடிகையர் திலகம் என்ற படம் சமீபத்தில் வெளியாகி தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது. தெலுங்கில் இந்த படம் மகாநதி என்ற பெயரில் வெளிவந்துள்ளது.

இது தொடர்பில் நடிகை கீர்த்தி சுரேஷ் தெரிவித்ததாவது…..

‘நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறான ‘நடிகையர் திலகம்’ என்ற தமிழ் படத்திலும், மகாநதி என்ற தெலுங்கு திரைப்படத்திலும் நடித்தது அதிர்ஷ்டமாகவும் பெருமையாகவும் உள்ளது.

இந்த திரைப்படத்தில் எனக்கு வாய்ப்பளித்த அனைவருக்கும் திரைப்படத்தை ஆதரித்த ரசிகர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இனி இது போன்ற சுயசரிதை படங்களில் நடிக்க மாட்டேன்’

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்