சவுந்தர்யாவாக நடிக்க பொருத்தமான நடிகை யார்?

சவுந்தர்யாவாக நடிக்க பொருத்தமான நடிகை யார்?

சவுந்தர்யாவாக நடிக்க பொருத்தமான நடிகை யார்?

எழுத்தாளர் Bella Dalima

16 May, 2018 | 3:49 pm

தமிழ் திரையுலகில் ரஜினி, கமல் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்தவர் சவுந்தர்யா.

முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருந்த போதே சவுந்தர்யா திடீரென ஹெலிகாப்டர் விபத்தில் பலியானார்.

இது திரையுலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இந்நிலையில், ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த அவரின் வாழ்க்கை கதையையும் திரைப்படமாக்க பொருத்தமாக இருக்கும் என்பதால் அதற்கான ஏற்பாடு தொடங்கியிருக்கிறது.

தமிழில் ‘நோட்டா’ படம் மூலம் அறிமுகமாகும் விஜய் தேவரகொண்டா தெலுங்கில் பெல்லி சூப்புலு படத்தில் நடித்திருந்தார். இப்படத்தை தயாரித்த ராஜ் கந்துகுரி, சவுந்தர்யா வாழ்க்கை படத்தை தயாரிக்க திட்டமிட்டுள்ளார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என 4 மொழிகளில் படம் உருவாகவுள்ளது.

சவுந்தர்யாவாக நடிக்க பொருத்தமான நடிகை மற்றும் இயக்குனர் தேர்வு இடம்பெற்று வருகிறது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்