இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் 2017 ஆம் ஆண்டிற்கான கணக்காய்வு அறிக்கை கையளிப்பு

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் 2017 ஆம் ஆண்டிற்கான கணக்காய்வு அறிக்கை கையளிப்பு

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் 2017 ஆம் ஆண்டிற்கான கணக்காய்வு அறிக்கை கையளிப்பு

எழுத்தாளர் Bella Dalima

16 May, 2018 | 8:12 pm

Colombo (News 1st) 

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் கடந்த வருடத்திற்கான கணக்காய்வு அறிக்கை விளையாட்டுத்துறை அமைச்சரான பைஸர் முஸ்தபாவிடம் இன்று கையளிக்கப்பட்டது.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தலைவரான திலங்க சுமதிபால இன்று பிற்பகல் விளையாட்டுத்துறை அமைச்சுக்கு சென்று கணக்காய்வு அறிக்கையை கையளித்தார்.

இதன்போது, இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தலைவர் திலங்க சுமதிபால தெரிவித்ததாவது,

இலங்கை கிரிக்கெட் வரலாற்றில் அதிக இலாபம் ஈட்டப்பட்ட ஆண்டாக 2017 ஆம் ஆண்டு பதிவாகும். 6 பில்லியன் ரூபாவுக்கு மேற்பட்ட தொகை ஈட்டப்பட்டுள்ளது. இலங்கை வரலாற்றில் எந்தவொரு நிறுவனமும் இவ்வாறான தொகையை விளையாட்டுத்துறையில் இலாபமாக ஈட்டவில்லை. சில வருடங்கள் வருமானமின்றி சம்பளம் கொடுக்க முடியாமல் வங்கிகளில் கடன் பெற்று செலுத்திய சந்தர்ப்பங்களும் உண்டு.

என தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்