அரசியலமைப்பு வழிநடத்தல் குழு 24 ஆம் திகதி மீண்டும் கூடவுள்ளது

அரசியலமைப்பு வழிநடத்தல் குழு 24 ஆம் திகதி மீண்டும் கூடவுள்ளது

அரசியலமைப்பு வழிநடத்தல் குழு 24 ஆம் திகதி மீண்டும் கூடவுள்ளது

எழுத்தாளர் Staff Writer

16 May, 2018 | 11:46 am

COLOMBO (News 1st) அரசியலமைப்பு வழிநடத்தல் குழு பல மாதங்களின் பின்னர் எதிர்வரும் 24 ஆம் திகதி மீண்டும் கூடவுள்ளது.

அரசியலமைப்பு வழிநடத்தல் குழு கடந்த வருடம் நவம்பர் மாதத்தில் இறுதியாக கூடியிருந்தது.

பிரதமரின் தலைமையிலான குறித்த அரசியலமைப்பு வழிநடத்தல் குழு, அரசியலமைப்பு பேரவையின் ஆதரவுடன் நியமிக்கபட்டது.

21 உறுப்பினர்களைக் கொண்ட குறித்த அரசியலமைப்பு வழிநடத்தல் குழு பாராளுமன்றத்தில் இடைக்கால அறிக்கையொன்றை சமர்ப்பித்ததுடன் அது தொடர்பிலான விவாதம் 5 நாட்கள் வரை முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இந்த விவாதத்தின் போது முன்வைக்கப்பட்ட விடயங்கள், குறித்த இடைக்கால அறிக்கை தொடர்பில் கிடைக்கப்பெற்ற பொதுமக்கள் மற்றும் நிபுணர்களின் கருத்துக்கள் தொடர்பில் எதிர்வரும் 24 ஆம் திகதி கூடவுள்ள அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவில் கலந்துரையாடப்படவுள்ளது.

இந்த கலந்துரையாடலின் போது புதிய அரசியலமைப்பை உருவாக்குவதா அல்லது நடைமுறையிலுள்ள அரசியலமைப்பில் திருத்தம் மேற்கொள்வதா என்பது தொடர்பில் தீவிர ஆலோசனை நடத்தப்படவுள்ளதாக அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவின் செயலாளர் காரியாலயத்தின் மேலதிக செயலாளர் அரச சட்டத்தரணி யுரேஷா பெர்னான்டோ நியூஸ்பெஸ்டுக்கு தெரிவித்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்